சென்னை: பொது விநியோக திட்டப் பொருட் களைக் கடத்துபவர்கள் மற்றும் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறையின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை (சிவில் சப்ளை சிஐடி) ஐ.ஜி.ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டார். இதை யடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. குறிப்பாக பிற மாநிலங்களுக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படு வதைத் தடுக்க மாநில எல்லை சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 13 முதல் கடந்த 12-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத் தில் பொது விநியோக திட்டப் பொருட்களான அரிசி, மண் ணெண்ணெய் உள்ளிட்ட பொருட் களைக் கடத்தியதாக தமிழகம் முழுவதும் 832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2,693 குவிண்டால் பொது விநியோக திட்ட அரிசி (ரேஷன் அரிசி), 660 லிட்டர் மண்ணெண்ணெய், 196 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை (வணிக ரீதியாக பயன்படுத்தியது)கைப்பற்றப்பட்டுள்ளன. இப்பொருட்களின் மொத்தமதிப்பு ரூ.17,13,845. மேலும் கடத்தல், பதுக்கலில்ஈடுபட்டதாக 860 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 143 வாகனங்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.