விழுப்புரம்: விழுப்புரம், வழுதரெட்டி பகுதி யில் உள்ள கௌதம் நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் அராஜகன் (26). இவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், கடந்த 13-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், நேற்று முன்தினம் பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக மூளைச்சாவு ஏற் பட்ட காரணத்தால், அவரது பெற்றோர், தங்கள் மகனின் உடலில்உள்ள உறுப்புகளை தானம் செய்யமுன்வந்தனர். இதையடுத்து அராஜ கனின் இரு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பின்னர் அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அராஜகன்

இதனை தொடர்ந்து விழுப்புரத் தில் நேற்று உறவினர்கள், நண்பர்க ளின் அஞ்சலிக்காக அராஜகனின் உடல் வைக்கப்பட்டிருந்தது. உடல் உறுப்புகளை தானம் செய்திருந்த நிலையில், அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி,எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் ஆகி யோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “அராஜகன் எம்பிஏ பட்டம் பெற்று, சென்னையில் உள்ளதனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தந்தை கலியமூர்த்தி, காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் புவனேஸ்வரி, நன்னாடு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் உயிரிழப்பு வருந்தத்தக்க துயரம். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி யிருக்கிறோம்” என்று தெரிவித் தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *