அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவுசெய்திருக்கும் வழக்கின் நிலை என்ன… ஒரு காவல்துறை அதிகாரிமீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, மற்ற காவல்துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர்.
அதையடுத்து, “இது தொடர்பாக விளக்கமளிக்க, சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞரையும், தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞரையும் அடுத்த விசாரணையின்போது, ஆஜராகச் சொல்கிறேன்” என தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

“குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வுபெற்றுவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அரசுத் தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ், ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்களிடையே பிரச்னை ஏற்பட்டபோது, அதைத் திறமையாகக் கையாண்டு, நீதிமன்றம் சுமுகமாகச் செயல்பட உதவியவர். அவர் எப்படி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்… தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்னென்ன… துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.