சென்னை: சதீஷ் நடிக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

வீடியோவின் தொடக்கத்தில் லெட்டர் பேட் ஒன்றுக்கு க்ளோசப் வைக்கப்படுகிறது. அதில், ‘மியூசிக்கல் டாக்டர்’ யுவன் சங்கர் ராஜா என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே லெட்டர் பேட்டின் கீழ்பகுதியில், பார்வை நேரம்: இரவு 10 மணிக்கு மேல். தொடர்புக்கு: எப்படியும் போன் எடுக்க மாட்டேன். எதுக்கு? என எழுதப்பட்டுள்ளது. அடுத்து யுவன் சங்கர் ராஜாவிடம், ‘ப்ரேக் அப் ஆகிவிட்டது’ என ஒருவர் கூற, அதற்கு யுவன், காலையில் சாப்பாட்டுக்கு முன்பு ‘லூசுப்பெண்ணே’ பாடல் 2 தடவை, சாப்பாட்டுக்குப் பின், ‘போகாதே’ பாடலை 3 தடவையும் கேட்க அறிவுறுத்துகிறார்.

அடுத்து வரும் ஒருவர், ‘அம்மா மீது பாசமே வரவில்லை’ என சொல்ல அவரிடம், ‘ஆராரி ராரோ’ பாடலை கேட்க சொல்கிறார். இந்த வரிசையில் கடைசியாக வரும் நடிகர் சதீஷ் ‘தூக்கம் வராம இருக்க’ பாடல் கேட்க, அதை யுவன் எழுதி தருகிறார். அத்துடன் கடைசியில் ‘விஜய் 68’ பாடல் அப்டேட்டை கேட்க வீடியோ முடிவடைகிறது. வித்தியாசமான இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் சிங்கிள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ஜூரிங் கண்ணப்பன்​​​​: அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படம், ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வீடியோ:

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: