
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ. 18) காலை 10 மணியளவில் தொடங்கியது. முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜனநாயகத்தை ஆளுநர் ஆர்.என். ரவி அவமதிக்கிறார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி தமிழக மக்களையும் தமிழக சட்டப்பேரவையையும் ஆளுநர் அவமதிக்கிறார்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…