கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என சுமார் 12,000 பணியாற்றி வருகின்றனர். நிர்வாக குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம். ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனால், அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. நிதி நெருக்கடியிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய தமிழக அரசு, சிவதாஸ் மீனாவை சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்ட போது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரிய வந்தது. அதனால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, உயர்கல்வித் துறையில் கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில்தான் போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 56 பேரை, அதிரடியாக பணி நீக்கம் செய்திருக்கும் தமிழக உயர்கல்வித் துறை. இரண்டாம் கட்டப் பட்டியலை தயாரித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் போலி சான்றிதழ்கள் மற்றும் போதிய தகுதியில்லாமல் பணி புரிந்து வருபவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.