மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு
ANI

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 7-ம் தேதி, நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: