
கடலூர் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டுள்ள இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
சிதம்பரம்: வடமேற்கு வங்க கடலில் புதிய புயல் ஒன்று உருவாகி உள்ளது இந்த புயலுக்கு மிதிலி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல்வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேச கடற்கரையை கடக்கக்கூடும் என்றும், இதனால் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக, சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுரை வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
இதை அடுத்து கடலூர் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
இந்த எச்சரிக்கையை கூண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…