போடி: தேனி மாவட்டம் போடியில் கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

போடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி கிருஷ்ணவேணி (39). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் ரமேஷ் வீட்டின் குளியலறை அருகே சுய நினைவின்றி கிடந்ததாகக் கூறி போடி அரசு மருத்துவமனையில் அவரை கிருஷ்ணவேணி சேர்த்தார். பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் இறந்து விட்டதாகக் கூறினர்.

போலீஸார் விசாரித்தபோது, கணவர் தன்னுடன் சண்டையிட்டார். பின்பு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். சமாதானப் படுத்தி தூங்கச் செய்தேன். மயங்கிக் கிடப்பதாக நினைத்து மருத்துவமனையில் சேர்த்தேன், என கிருஷ்ணவேணி கூறினார். ஆனால், உடற்கூராய்வில் ரமேஷின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. உயிர் தளத்திலும் ரத்தக் காயம் இருந்தது என்று மருத்து வர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணவேணியிடம் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ரமேஷுக்குச் சொந்தமான ஏலத் தோட்டத்தையும், போடியில் உள்ள நிலத்தையும் விற்பனை செய்வதில் கணவன்- மனைவி இடையே பிரச்சினை இருந்துள்ளது. தனக்கு தெரிந்தவர்களுக்கு நிலத்தை விற்பனை செய்ய கிருஷ்ணவேணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது கிருஷ்ணவேணி ரமேஷை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. போடி போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணவேணியை கைது செய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: