கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்றும் 3-வது நாளாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் நவ. 13-ம் தேதி இரவு தொடங்கி நவ. 14-ம் தேதி மாலை வரை கனமழை பெய்தது. நேற்றும் பல்வேறு இடங்கள் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட் டத்துடன் காணப்பட்டது. கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.