இதற்கு பதிலளித்த பேசிய சீன அதிபர், “சீனா மக்கள் குடியரசு நாடாக மாறி 70 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை எங்கள் நாடு எந்த ஒரு போரையும், மோதலையும் தூண்டியதில்லை. அண்டை நாடுகளிடமிருந்து ஒரு இன்ச் நிலைப்பரப்பை கூட சீன அரசு ஆக்கிரமிப்பு செய்ததில்லை” என பேசினார்.

ஆனால் சீன அரசு இந்தியா, திபெத், தைவான் உள்ளிட்ட நாடுகளுடன் எல்லை மற்றும் அதிகாரம் தொடர்பாக பிரச்னைகள் கொடுத்து வருவதும், அடிக்கடி சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சம்பவங்களும் நிகழ்ந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது. அப்போது இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்தனர். அப்பொழுதும் சீன அரசு அப்பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை திரும்பப் பெறவில்லை. மூன்று ஆண்டுகளாக நடைப்பெற்ற 19 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் இடைக்காலமாக அமைதி நிலை நாட்ட ஒப்பந்தம் செய்தது. அதன்பிறகே ராணுவவீரகளை திரும்பப் பெற்றது சீன அரசு.
இதுபோன்ற சூழல் நிலவும் போது பிற நாடுகளுடன் நல்லுறவை பேணுவதாக சீன அதிபர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.