கோப்புப்படம்
தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது என்று கூறியது.
இதன் எதிரொலியாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட, நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவி! நவ. 18ல் சிறப்புக் கூட்டம்?
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை அவசரக் கூட்டம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார், இது தொடர்பாக இந்த அவசரக் கூட்டம் நடைபெறவிருப்பதாகத் தெரிவித்தார்.
நீட் மசோதா, ஆன்லைன் ரம்மி மசோதா உள்ளிட்டவை இரு முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பின்னரே ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | 10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…