1971-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயானப் போரில் கிழக்குப் பகுதியில் 45வது டேங்க் ஸ்குவாட்ரனில் போர் செய்த ராணுவ வீரரான பிரிகேடியர் பல்ராம் சிங் மேத்தாவைப் பற்றிய கதை இது. தேசத்திற்காகப் போராடும் பிரிகேடியரின் தேசப்பற்று, குடும்பம், காதல் எனப் படபடக்கும் போர்க்களத்தில் நடக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நவீன இசைக் கருவிகள், புதிய இசைத் தயாரிப்பு முறைகள் எனத் தனது எல்லா படங்களிலும் தனித்துவத்துடன் நிறைய விஷயங்களைச் சேர்ப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். அதுமட்டுமின்றி, கதையின் உணர்வையும், அதன் அர்த்தங்களையும் உணர வைக்கப் பின்னணி இசையோடு சூபி, கலிங்கத்துப்பரணி, சித்தர் – சிவனடியார் பாடல்கள் போன்றவற்றைச் சேர்ப்பது ரஹ்மானின் தனித்துவங்களில் ஒன்று.
அவ்வகையில், கவிதை, பாடல்கள், இசை மூலம் விடுதலை உணர்வை வங்காள மக்களிடம் கிளர்ந்து எழச் செய்த கவிஞரும், எழுத்தாளருமான கசி நஸ்ருல் இஸ்லாமின் ‘Karar Oi Louho Kopat’ என்ற பாடலின் வரிகளை ரஹ்மான் ‘Pippa’ படத்தில் புதிய மெட்டுடன் இசையமைத்துள்ளார்.
+ There are no comments
Add yours