தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் த்ரிஷா, சமீபத்தில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார்.

லியோ படத்தில் த்ரிஷா:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியாகியிருந்த படம், லியோ (Leo Movie). மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யுடன் இரண்டாவது முறையாக லோகி கைக்காேர்த்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். ஏற்கனவே விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, குறுவி, ஆதி போன்ற படங்களில் நடித்த இவர், சுமார் 15 வருடங்களுக்கு பிறகு நடித்திருந்த படம், லியோ. அந்த படங்களில் இவர்களுக்குள் எந்த மாதிரியான காதலும் கெமிஸ்டிரியும் இருந்ததாே அது அப்படியே லியோ படத்திலும் இருந்தது. இப்படத்தில் நடித்து முடித்த பிறகு த்ரிஷா (Trisha Salary) தற்போது தனது சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 

த்ரிஷாவின் சம்பளம்..

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக மட்டுமே நடித்து வருபவர், த்ரிஷா. இவருடன் திரை வாழ்க்கையை தொடங்கிய பலர் அக்கா, அண்ணி வேடங்களுக்கு மாறிவிட்டாலும் இன்றளவும் த்ரிஷா மட்டும் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கிறார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் வந்த இவர், துணை நடிகையாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். மெல்ல மெல்ல கதாநாயகியாக உயர்ந்து, தற்போது தென்னிந்திய பிரபலங்கள் அனைவருடனும் நடித்த ஒரே நாயகி என்ற இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில், ரஜினி-கமல்ஹாசன் தொடங்கி அஜித்-விஜய், கார்த்தி-சூர்யா வரை அனைவருடனும் படங்களில் ஜோடி போட்டுவிட்டார். 

ஆரம்பத்தில் படங்களில் நடிப்பதற்கு லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த இவர், அதை கடந்த 10 ஆண்டுகளில் கோடிகளாக மாற்றினார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்த இவருக்கு, ரூ.2 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம். இதையடுத்து இவர் நடித்திருந்த லியோ படத்திற்காக ரூ.4 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்த பிறகு த்ரிஷாவின் மார்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளதாம். அதனால், இவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ.10 கோடிக்கு குறைவாக சம்பளம் வாங்குவதில்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் படிக்க | ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்! என்ன கேரக்டர் தெரியுமா?

சம்பள உயர்வுக்கான காரணம்..

தற்போது உள்ள தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நாயகி-தேடுதல் வேட்டையில் இருப்பவர் த்ரிஷா. இவர், நாயகியாக சில படங்களில் நடித்தாலும் ஹீரோயின் சப்ஜெக்ட் இருக்கும் சில படங்களிலும் நடித்து தனித்துவம் காட்டி வருகிறார். அது மட்டுமல்லாமல், கடந்த சில வருடங்களாக இவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் படங்கள் அனைத்தும் வெற்றியை தேடி தந்துள்ளன. இது, இவரது சம்பளம் உயர்ந்ததற்கு இன்னொரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

த்ரிஷாவின் அடுத்தடுத்த படங்கள்..

கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு பிசி நடிகையாக வலம் வருகிறார், த்ரிஷா. 35 வருடங்களுக்கு பிறகு, மணிரத்னம்-கமல்ஹாசன் கைக்கோர்த்துள்ள “தக் லைஃப்” படத்தின் கதாநாயகி த்ரிஷாதான். இந்த படத்தில் இவருடன் கார்த்தி, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோரும் இணைந்துள்ளனர். மலையாளத்தில், டொவினோ தாமஸ் உடன் இணைந்து மலையாள படம் ஒன்றிலும் நடிக்கிறார். மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி, இன்னும் நிறைய கதைகளை த்ரிஷா கேட்டு வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் கார்த்தி! இயக்குநர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: