
28.11.23 முதல் 11.12.23 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, பாண்டிச்சேரி, ஞானமேடு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்தக் கோயில் சகல தோஷ நிவர்த்தித் தலமாகவும், தன, தான்ய லாபங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தலமாகவும் திகழ்கிறது. இங்கே பைரவரின் அங்கத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் சஞ்சரிப்பதாக ஐதிகம். ஆத்ம பிரதிஷ்டை செய்து விசேஷ நெற்றிக் கண் ணுடன் அருளும் திவ்ய பைரவர் இத்தலத்தின் விசேஷம்!
இங்கு வந்து வேண்டினாலே ஏமாற்றங்கள், உடல் பிணிகள், முன்வினை பாவங்கள், தோஷங்கள், அச்சங்கள் ஆகிய அனைத்தும் விலகி, சகல நன்மைகளும் உண்டாகும். அற்புதமான இந்த ஆலயத்தில் வாசகர்கள் நீண்ட ஆயுள் நிறைவான வாழ்வு பெறவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!