சிருஷ்டியின் மூலமாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து தேவர்களால் வணங்கப்படுபவளும், அழகிய திருக்கரத்தில் சங்கு, சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
கருட வாகனத்தில் அமர்ந்தவளும், கோலாஸூரர்களுக்கு அச்சம் தந்தவளும், சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
அனைத்தும் அறிந்தவளும், அனைத்து வரங்களைத் தருபவளும், துஷ்ட குணங்களை அழிப்பவளும், துக்கங்களை மாற்றுபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
சாதனைகள் புரிய புத்தியை அளிப்பவளும், செழிப்புடன் வாழ தனது பாத கமலங்களை அருள்பவளும், மந்திர சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
ஆதி அந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கும் காரணமாக இருப்பவளும், அதிர்ஷ்ட யோகமாகப் பிறந்தவளும், வெற்றியுடன் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
சூட்சும வடிவில் ஆதார சக்தியாக விளங்குபவளும், தீமைக்கு எதிராக அச்சமூட்டும் ருத்ரணியாக விளங்குபவளும், முப்பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், பாபங்களை அழிப்பவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
தாமரை ஆசனத்தில் அழகுடன் அமர்ந்திருப்பவளும், ஞான தபஸ்வினியாக விளங்குபவளும், கலியுகத்தின் அன்னையாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.