சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு போதைப் பொருள்கடத்தி வரப்படுவதாக மத்தியவருவாய் புலனாய்வு பிரிவுக்குரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் தாய்லாந்தில் இருந்துவிமானம் சென்னைக்கு வந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
அப்போது, தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று திரும்பிய சென்னையில் வசிக்கும்வடமாநில இளைஞர் ஜான்(23)என்பவரின் கைப்பைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ.22 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ ஹெராயின் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுத்தியலில் தங்கம் மறைப்பு: மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த விமானப் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மலேசியாவை சேர்ந்த ஆண் பயணி கொண்டு வந்திருந்த 2 சுத்தியலை சோதனை செய்தபோது, அதில் ரூ.1.88 கோடி மதிப்புள்ள 3.49 கிலோ தங்கம் இருந்தது. கோலாலம்பூரில் இருந்துவந்த சென்னையைச் சேர்ந்த வள்ளி (31), ஆயிஷா (எ)சித்திகா (30) ஆகிய பயணிகள் உள்ளாடைக்குள் ரூ.1.25கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோல், குவைத்தில் இருந்து அபுதாபி வழியாக சென்னை வந்த ஆண் பயணி கொண்டு வந்திருந்த எல்இடி லைட்களை சோதனை செய்தபோது, அதில் ரூ.2.67 கோடிமதிப்புள்ள 4.93 கிலோதங்கக் கட்டிகள் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இந்த ஆண்டில் இதுவரை ரூ.112 கோடி மதிப்புள்ள 200 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.