பரபரப்பாக நடந்து வரும் பிக்பாஸ் போட்டியில் பலமான போட்டியாளர்களுள் ஒருவராக இருப்பவர், மாயா. இந்த போட்டிக்குள் செல்வதற்கு முன்னரே இவர் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்கள் சில பேரின் படங்களில் நடித்துள்ளார்.
மாயா எஸ்.கிருஷ்ணன்:
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே, 2015ஆம் ஆண்டு நடிக்க வந்தவர், மாயா எஸ்.கிருஷ்ணன். மதுரையில் படித்து வளர்ந்த மாயா, தமிழில் வெளியான சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் பாய் கட்டுடன் வந்து பலரை “யார்ரா இந்த பொண்ணு..” என்று யோசிக்க வைத்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படங்களில் நடிப்பது மட்டுமன்றி தமிழகத்தின் பிரபலமான மேடை நாடக கலைஞராகவும் உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த மாதம் 1ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சியில், மிகவும் பலமான போட்டியாளராக கருதப்படுபவர்களுள் ஒருவர், மாயா. தான் செய்வது தவறு என்று பலர் கூறினாலும், “ஆமாம்..தப்புதான் பன்றேன். என்ன செய்ய முடியும் உங்களால..” என்று கேட்கும் இவரது குணாதிசயம் பலருக்கு வெறுப்பை வரவழைத்து. ஆனாலும் இவர் அது குறித்தெல்லாம் கவலைப்படுவதே இல்லை. தற்போது பிரதீப்பின் ரெட் கார்டு விவகார்த்தின் போதும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால், மாயாவிற்கு வெளியில் ரசிகர்கள் கூட்டத்தை விட ஹேட்டர்ஸ் கூட்டம்தான் அதிகமாக உள்ளது.
மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் படங்களில் நடித்தவர்..
கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை, ஸ்டார் நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களில் முக்கியமான மூன்று பேரின் படங்களில் மாயா நடித்துள்ளார். அந்த ஸ்டார் நடிகர்கள் யார் யார், அவர்கள் நடித்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க | ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் கார்த்தி! இயக்குநர் யார் தெரியுமா?
ரஜினிகாந்தின் 2.0:
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2018ஆம் ஆண்டு வெளியான படம், 2.0. இந்த படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்தார்.
கமலுடன் விக்ரம் படத்தில்..
கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினை பெற்ற படம், விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக கமல் மற்றும் பகத் பாசிலுடன் சேர்ந்து நடித்திருந்தார். இதில் இவருக்காக வரும் ஒரு பின்னணி இசையும் பெரிதாக வைரலானது.
லியோ படத்தில் விஜய்யுடன்..
சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வரும் படம், லியோ. விக்ரம் படத்தில் என்ன கதாப்பாத்திரத்தில் வந்தாரோ, அதே கதாப்பாத்திரத்தில் லியோ படத்திலும் சில விநாடிகள் வந்தார். இதில், விஜய் நடத்தி வரும் தேனீர் விடுதிக்கு விக்ரமின் ஏஜெண்டாக விசிட் செய்யும் கதாப்பாத்திரத்தில் மாயா நடித்திருந்தார்.
ரசிகர்களுக்கு மாயா மீது வெறுப்பு..
மாயா, தான் நடித்த படங்களில் ‘பெண்ணுக்குரிய’ கதாாப்பாத்திரம் என எதையும் தேர்ந்தெடுத்து நடித்ததில்லை. அது மட்டுமன்றி, இவர் பேசும் பல கருத்துகள் சமூகத்தில் இருக்கும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. இதனால், மாயாவை கண்டாலே பலருக்கு வெறுப்பு. போதாக்குறைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் விவகார்த்தில் ரெட் கார்டு காண்பித்த இவர், ஒரு ஆணிடம் தனது உள்ளாடையை எடுத்து காண்பித்தது பெரும் பேசுபொருளாக மாறியது. 2018ஆம் ஆண்டு இவர் மீது ஒரு பெண் பாலியல் வழக்கு தொடுத்துள்ளார். இவையெல்லாம் சேர்ந்து, தற்போது மாயாவிற்கு அவப்பெயரை தேடி தந்துள்ளது.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்திற்கு பிறகு சம்பளத்தை சரமாரியாக உயர்த்திய த்ரிஷா! எத்தனை கோடி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours