
கோப்புப்படம்
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பேரிடர்களை எதிர்கொள்ள முறையான நெறிமுறைகளைக் கையாள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க | கேரள சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!
மழைக் கால பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பது, பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…