
கோப்புப் படம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 15) விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
படிக்க | கனமழை பாதிப்பு: அமைச்சர்கள் சென்று பார்வையிட உத்தரவு!
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்கள் நலன் கருதி நாளை (நவ. 15) திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…