
புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 15) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், நாளையும் கனமழை வாய்ப்புள்ளதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…