தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே, அரசியல்களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். கட்சித் தாவல், வேட்பாளர் பின்னணி, கட்சிகளுக்கிடையே சாடல், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடும் குடும்ப உறுப்பினர்கள் என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல் `பரபர” சம்பவங்கள் நீண்டுகொண்டே போகும். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலச் சட்டசபைத் தேர்தலில் குடும்ப உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் காண்பது, மக்களிடையே எதிர்பார்ப்பை `எகிற’ வைத்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் (200 தொகுதிகளுக்கும்) ஒரே கட்டமாக நவம்பர் 25-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதை முன்னிட்டு தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அனல் பறக்கும் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இதில் நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ராஜஸ்தான் சட்டமன்றம்

ராஜஸ்தான் சட்டமன்றம்

1. கணவன் Vs மனைவி

சிக்கரின் தந்தா ராம்கர் தொகுதியில் ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார், அந்தக் கட்சியின் மகளிர் பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கும் ரீட்டா. ரீட்டாவை எதிர்த்து 2018-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை 920 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவரின் கணவர் வீரேந்திரன், காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார்.

2. அண்ணி Vs மைத்துனர்

தோல்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷோபாராணி களம் காண்கிறார். இவர் 2018-ம் ஆண்டு பா.ஜ.க சார்பில் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரான தனது மைத்துனர் ஷிவ்சரணை வெற்றிகண்டார். பின்னர் ராஜ்ய சபா தேர்தலில் இவர் குறுக்கு வாக்களித்ததால், பா.ஜ.க-விலிருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து, அவர் காங்கிரஸில் இணைந்தார். அதே சமயம், அவருடைய மைத்துனர் பா.ஜ.க-வில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது ஷோபாராணி காங்கிரஸ் சார்பிலும், அவருடைய மைத்துனர் ஷிவ்சரண் பா.ஜ.க சார்பிலும் தோல்பூர் தொகுதியில் களம் காண்கின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: