தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பு : ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள் – சல்மான்கான் வேண்டுகோள்
14 நவ, 2023 – 10:56 IST
சல்மான்கான், கத்ரினா கைப் நடித்த ‘டைகர் 3’ படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இதனால் சல்மான் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள். இதன் உச்சபட்சமாக மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற ஊரில் படம் தொடங்கியதும் தியேட்டருக்குள் சரமாரியாக பட்டாசை கொழுத்தினார்கள்.
இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்கள். பெண்கள் உள்ளிட்ட சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தார்கள். தியேட்டர் முழுவதும் புகை மூட்டத்தால் சிலருக்கு மூச்சு திணறியது. இதனால் அந்த காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை பார்த்து ரசியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours