
கோப்புப்படம்
தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.467.69 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ரூ.221 கோடிக்கும், தீபாவளி பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை ரூ.246 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனம், 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. அதில் அதிகபட்சமாக சனிக்கிழமை மதுரை மண்டலத்தில் ரூ.52.73 கோடிக்கும், தீபாவளி பண்டிகை திருச்சி மண்டலத்தில் ரூ.55.60 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது. குறைந்த அளவாக சனிக்கிழமை சேலம் மண்டலத்தில் ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி
பண்டிகை கோவை மண்டலத்தில் ரூ.39.61 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்.24-ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபாவளியன்று ஒரே நாளில் மட்டும் ரூ.256 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.
கடந்த ஆண்டு சனி, ஞாயிறு மற்றும் திங்கள் (தீபாவளி) என வார விடுமுறை நாள்களையும் சோ்த்து ரூ.720 கோடி அளவுக்கு மதுபானம் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…