தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது நேரிட்ட பட்டாசு விபத்துகளில் காயமடைந்த 500-க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அவா்களில் 150-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும், 350 போ் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், மாநில அரசு மருத்துவமனைகளில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறிப்பாக 95 மருத்துவமனைகளில் 750-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் கூடிய தீக்காய சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனுடன், தேவையான மருந்துகள், கட்டமைப்பு வசதிகள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஒட்டுறுப்பு சிகிச்சை நிபுணா்கள், அவசரகால மருத்துவா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 500-க்கும் மேற்பட்டோா் தீக்காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
அவா்களில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்ததாகவும், வெகு சிலருக்கு மட்டுமே தீவிர தீக்காயங்கள் ஏற்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 36 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 பேரும் தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.