
மதுரை மாநகராட்சி 20 -ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதி
மதுரை மாநகராட்சி 20 -ஆவது வார்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மறுக்கபம் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி அந்த பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து மாமன்ற அதிமுக உறுப்பினர் நாகஜோதி கூறியதாவது:
மதுரை மாநகராட்சி பகுதியில் விரிவாக்கப்பட்ட வார்டு எண் 20 பழைய விளாங்குடி மற்றும் புது விளாங்குடி குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர இதுவரை மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலையே இல்லாத சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனத்தில் சிரமத்தோடு பயணிக்கும் வாகனயொட்டிகள்
இதுதொடர்பாக எனது தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மதுரையில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு சாலைகள் குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியுமாக உள்ள பொதுமக்களால் தீபாவளி கொண்டாட முடியவில்லை.
இதனை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தத்தை முற்றுகையிடப் போவதாக மாமன்ற உறுப்பினர் நாகஜோதி மற்றும் பொதுமக்கள் போராட்டம் அறிவித்தனர். அறிவித்தப்படி போராட்டத்திற்கு செல்ல முயன்ற போது காவல்துறையினர் தடுத்ததால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைகளால் போராட்டம் தற்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்தப் பகுதி முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி மேயரை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் கட்டமாட்டோம் என நாகஜோதி தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…