ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை மறுநாள் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
ODI உலகக் கோப்பை அரையிறுதி IND vs NZ போட்டியின் நேரம்
வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் இப்போட்டி நவம்பர் 15 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு பகலிரவு போட்டியாக நடைபெற இருக்கிறது.
மேலும் படிக்க | 400 ரன்களை குவித்த இந்தியா – ராகுல், ஸ்ரேயாஸ் சதம் … நெதர்லாந்து பவுலரும் சதம்..!
மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலக கோப்பை லீக் போட்டிகளில் சில பரபரப்பான த்ரில்லர் போட்டிகளாக அமைந்தன. பேட்டிங் பிட்ச் என்றாலும் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் இந்த பிட்சின் நிலையை அறிந்து அதற்கேற்ப பந்துவீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பவர்பிளே தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் இருக்கும். செம்மண் பிட்ச் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தலாம்.
உலக கோப்பையில் இந்தியா – நியூசிலாந்து இதுவரை
இரண்டு வலுவான போட்டியாளர்களான இந்தியாவும் நியூசிலாந்தும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதியில் மோதுகின்றன. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் இந்தியா, நியூசிலாந்து அணிகளே அரையிறுதிப் போட்டியில் மோதின. அப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும் ஐசிசி போட்டிகளில் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதேசமயம் இந்தியா 4 போட்டிகளில் வெற்றி பெற்றது, 1 ஆட்டம் சமநிலையில்/முடிவின்றி முடிந்தது.
இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்
இந்திய அணியின் உத்தேச ப்ளேயிங் லெவன் – ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, கே.எல். ராகுல் (கீப்பர்), சுப்மன் கில், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ்
நியூசிலாந்து உத்தேச ப்ளேயிங் லெவன் – கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டெவோன் கான்வே, டாம் லாதம் (WK), டிரென்ட் போல்ட், க்ளென் பிலிப்ஸ், டிம் சவுத்தி, டேரில் மிட்செல், லாக்கி பெர்குசன்
மேலும் படிக்க | உலககோப்பை அரையிறுதிப் போட்டி: நீங்கள் கேள்விப்படாத 8 சுவாரஸ்யங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ