திருவண்ணாமலை: செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஏபிஆர் நிதி நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம், புதிய காஞ்சிபுரம் சாலையில் ஏபிஆர் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் அல்தாப்தாசிப். இவருக்கு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் இதேபோல் அண்டை மாநிலங் களான ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சுமார் 50 கிளைகள் உள்ளன.
தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை கால சிறப்பு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மளிகை பொருட்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகை, வெள்ளி பொருட்கள் என கவர்ச்சிகரமான அறிவிப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை திட்டத்தில் இணைந்து பணம் செலுத்திய மக்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை. இதுதொடர்பாக, செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நிதி நிறுவன அலுவலகத்தை நேற்று முன்தினம் சூறையாடினர். மேலும் அலுவலகத்தில் இருந்த ஏசி, பீரோ உள்ளிட்ட ஓரிரு லட்சம் மட்டுமே மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்றனர்.
இதேபோல், நிதி நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான மளிகை கடை மற்றும் வீடும் சூறையாடப்பட்டது. மேலும், பணத்தை மீட்டுத் தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பல கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர் அல்தாப்தாசிப், “நிதி நிறுவனம் சூறையாடப்பட்டுள்ளது. பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. எனக்கும், எனது குடும் பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும்” என ஆடியோ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தமேரி கொடுத்த புகாரில், “ஏபிஆர் நிதி நிறுவனம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை மோசடி செய்துள்ளது. நானும், எனது கிராமத்தில் வசிக்கும் ஜான்சி மேரி உள்ளிட்டவர்கள் ரூ.26.83 லட்சம் செலுத்தி உள்ளோம். முதிர்வு காலம் முடிந்த பிறகு பொருட்களை கொடுக்காமல் உரிமை யாளர் அல்தாப்தாசிப் மோசடி செய்துள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த உரிமையாளர் அல்தாப்தாசிப்பை ஆந்திர மாநிலம் சித்தூரில் செய் யாறு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். நிதி நிறுவனம் சூறையாடப்பட்டுள்ளது. பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனக்கும், எனது குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.