
சென்னையிலிருந்து மதுரை சென்றவர்கள் திரும்பிவதற்காக மதுரையிலிருந்து கூடுதலாக 140 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வரும் 15ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று திங்கள் கிழமை (நவ. 13) அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
நாளை வேலைநாள் என்பதால், சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் மதுரையிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக 140 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 15ஆம் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…