சென்னை: விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராகவும் இருப்பவர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன். இவரது மகன் ரமேஷ்(50). தி.நகர் கோபாலகிருஷ்ணன் தெருவில் வசித்து வருகிறார். இவர், தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் இரவு 10.30 மணி காட்சிக்குபடம் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்தார். படம் ஓடிக்கொண்டிருக்கும்.போது, ரமேஷின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த 3பெண்கள் உட்பட 6 பேர் விசில்அடித்து, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனால், படம் பார்க்க வந்தமற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

ரமேஷ் அவர்களை தட்டிக்கேட்டதால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், எதிர் தரப்பினர், அமைச்சரின்மகன் ரமேஷ் மற்றும் பேரன் மீதுதாக்குதல் நடத்தினர். இதைக் கண்டதிரையரங்க நிர்வாகத்தினர் படத்தை பாதியில் நிறுத்திவிட்டு,இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, 6 பேரும் வெளியே தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில், அமைச்சரின் பேரன் கதிருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவரை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து, தேனாம்பேட்டை போலீஸில் ரமேஷ் புகார்தெரிவித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, திரையரங்கத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: