திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தனியார் நிதி நிறு வனம் உள்ளது. செய்யாறை தலைமையிடமாக கொண்டு கடந்த சில ஆண்டுகளாக இயங்கிய நிதி நிறுவனத்துக்கு வேலூர், ராணிப் பேட்டை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம் மூலம் பண்டிகை கால சிறப்பு பரிசு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி திட்டத்துக்கு மளிகை, வெள்ளி பொருள், தங்க நகைகள், பட்டாசு, இனிப்பு வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தினர். இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர். அவர் களிடம், ஒரே தவணை மற்றும் மாத தவணை முறையில் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளி திட்ட முதிர்வு காலம் முடிந்த பிறகும் பொருட்களை வழங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலு வலகங்களில் முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில், செய்யாறில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று காலை திரண்டனர். இதை பார்த்த பாதுகாவலர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர், நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள், அலுவலகத்தை சூறையாடி, அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.

இதேபோல், நிதி நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்குகள், மளிகைக்கடை உணவகம் மற்றும் வீடுகளையும் சேதப்படுத்திஉள்ளனர். மளிகைக் கடையில் இருந்த பொருட்களை அள்ளி சென்றனர். பின்னர், செய்யாறு – காஞ்சிபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து செய்யாறு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: