சென்னை: வீடு புகுந்து நகை வழிப்பறி செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் கொள் ளையனை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து நகையைமீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். சென்னை அயனாவரம், கே.எச்.ரோடு பகுதியில் வசிப்பவர் அமராவதி (88). நேற்று முன்தினம் மதியம் இவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தார். அப்போது, முகமூடி அணிந்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையன், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.
சிசிடிவி கேமரா பதிவு: இதுகுறித்து அயனாவரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக அரும்பாக்கம், ஜெய் நகரைச்சேர்ந்த பாபு(35) என்பவரைபோலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மூதாட்டி அமராவதி யிடம் பறித்துச் செல்லப்பட்ட 8 பவுன் செயின் மீட்கப்பட்டது.