தமிழ் புத்தாண்டை குறி வைக்கும் கமலின் இந்தியன்-2 , சூர்யாவின் கங்குவா!
12 நவ, 2023 – 11:19 IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு கொண்டு வர அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. இதே போல் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தையும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதோடு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால் இந்த விடுமுறை நாட்களை குறி வைத்து இந்தியன்-2, கங்குவா படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.