புதுச்சேரி : தீபாவளி பண்டிகையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் கிடைக்காமல் வெளியூர் பயணிகள் அவதி அடைந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று புதுச்சேரி அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி சன்டே மார்க்கெட் உள்ளிட்ட வீதிகளில் உள்ள துணிக்கடைகள், பட்டாசு கடைகள், சுவிட் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடலுார், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க புதுச்சேரியில் குவிந்ததால், நகர வீதிகள் அனைத்தும் உச்சகட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
அண்ணா சாலை, காந்தி வீதி, மறைமலையடிகள் சாலை, வழுதாவூர் சாலையில் கடும் ‘டிராபிக் ஜாம்’ ஏற்பட்டது.
பயணிகள் அவதி
புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம், விழுப்புரம், திண்டிவனம், கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பெரும்பலான அரசு பஸ்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு அனுப்பட்டது.
இதனால் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து கடலுார், சிதம்பரம், விழுப்புரம் பகுதிக்கு அரசு பஸ்கள் குறைவாக இயங்கியதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் வெளியூர் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
