சென்னை: சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜலட்சுமி 8-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் புவனேஷ் (27). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் மதியம் 3.30 மணி முதல் இரவு 1.30 மணி வரை பணியாற்றுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல புவனேஷ் பணிக்கு வந்தார். இந்நிலையில் இரவு 12 மணி அளவில் தனது நண்பருடன் வெளியே டீக்கடைக்கு சென்று பேசிக்கொண்டிருந்தார். பின்னர், மீண்டும் அவர் வேலை செய்யும் 10-வது மாடிக்கு வந்தார். அப்போது, திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில், ஜன்னலை திறந்து கீழே குதித்துள்ளார். 10-வதுமாடியில் இருந்து கீழே விழுந்துபடுகாயம் அடைந்த புவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீஸார், புவனேஷ் உடலை மீட்டுராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பல்வேறு இடங்களில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்ற புவனேஷ், பலவகையில் முதலீடு செய்து பணத்தை இழந்ததால் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: