வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, என்.ஐ.ஏ.,வால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷானவாஸை இன்று(அக்.,02) டில்லி போலீசார் கைது செய்தனர்.
யார் இந்த பயங்கரவாதி ஷானவாஸ்?
பொறியியலாளராக இருந்து வந்த ஷானவாஸ் புனே ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தேடப்பட்டு வந்தார். டில்லியைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் புனேவுக்கு தப்பி சென்றார். கடந்த ஜூலை மாதம் புனவில் கூட்டாளிகள் இருவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் அங்கிருந்து தப்பி வந்து டில்லியில் தலைமறைவானார். சமீபத்தில் ஷானவாஸ் இருக்கும் தகவலை பகிர்வோருக்கு என்ஐஏ ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தது. இந்நிலையில், ஷாபி உஸ்ஸாமா என்கிற ஷானவாஸ் டில்லியில் சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல்
மேலும் இரண்டு பயங்கரவாதிகளையும் டில்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களிடமிருந்து வெடி தயாரிக்ககூடிய பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement