புதுச்சேரி: சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
இ.சி.ஆர்., கருவடிக்குப்பம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல் ரசிகர் மன்றங்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
