‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.
இதில் பங்கேற்று விளையாடும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் கண்டுள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பவுண்டரிகள் வித்தியாசத்தில் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது நியூஸிலாந்து அணி. இதுவரை இந்த அணி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இல்லை.
நியூஸிலாந்து அணி வீரர்கள்
உலகக் கோப்பையில் இதுவரை
உலகக் கோப்பை சாதனைகள்
மோதல் விவரம்