ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் சரவணகுமாருக்கு எதிராகச் செயல்பட்டுவந்ததைத் தொடர்ந்து, தற்போது அவர் மாற்றப்பட்டிருக்கிறார். சரவணக்குமார் ஆணையராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் ஆகின்றன. குறிப்பாக, மூன்று வருடங்கள் வரை அவர் பணியில் இருக்கலாம். ஆனால், திடீரென அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 80 சதவிகிதம் அளவுக்கு முடிந்த நிலையில், மேலும் பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால், அவர் நிச்சயம் பணியில் தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குச் செல்கிற வகையில் பலரும் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டார். அதனால் சிறு வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.

வாடகை அதிகமாக நிர்ணயம் செய்ததால், மாநகராட்சிக் கடைகளில் வாடகைக்கு இருக்கும் பலர் வாடகை கட்ட முடியாத சூழலில் தவித்தனர். அதை அவர் கண்டுகொள்ளவில்லை என ஆணையருக்கு எதிரானவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தாலும், நிச்சயம் தஞ்சாவூரில் சரவணக்குமாருக்கு முன்பும் பின்பும் என வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பட்டியலிடலாம். அரசியல் அழுத்தங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆணையர் சரவணக்குமாரை தஞ்சாவூரில் பணி நீட்டிப்புச் செய்தால், மிச்சமிருக்கும் பணிகளைத் திட்டமிட்டபடி முடிப்பார்” என்றனர்.