அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே அங்கு அமெரிக்க ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருவதால் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனீல் மெத்வதேவ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ட்ரூவ் ரூப்லேவை தோற்கடித்த போதிலும், வெயிலின் கொடுமையை அவரால் தாங்க இயலவில்லை. போட்டி முடிந்த மறு கனமே ஐஸ்கட்டிகளை வைத்து சுற்றப்பட்ட டவலை எடுத்து தன்னுடைய தலையை போர்த்திக் கொண்டார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினை

போட்டியில் வெற்றி பெற்ற போதிலும், அவ்வளவு சூடான வெயிலில் விளையாண்டதன் காரணமாக டேனீல் மெத்வதேவின் மனம் மகிழ்ச்சி அடையவில்லை. உதாரணத்திற்கு 3-ஆவது செட் ஆட்டத்தின்போது, கேமராவை பார்த்தபடி அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்திவிட்டார். வியர்வையை துடைத்தபடி, “உங்களால் கற்பனை செய்ய இயலாது. ஒரு வீரர் இறக்க போகிறார். நீங்களும் அதை பார்க்கப் போகிறீர்கள்’’ என்று கூறினார்.

டென்னிஸ் திறனா அல்லது வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனா?

அமெரிக்காவில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடும் வெப்பம் நீடித்தது. ஆகஸ்ட் மாதத்திலும் இந்த வெப்பத்தில் கொஞ்சம் கூட குறையவில்லை. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திலும் அதே அளவு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. விளையாட்டின் மீது கவனம் செலுத்திய அதே வேளையில், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் டேனீல் தவித்துக் கொண்டிருந்ததை மைதானத்திலேயே பார்க்க முடிந்தது. அவருக்கு மூச்சு வாங்கியது. தலையை கால் மூட்டுகளில் சாய்த்தபடி உட்கார்ந்து கொண்டார். மருத்துவர் வந்து மூச்சுத்திறனை பரிசோதிக்க வேண்டியிருந்தது. பின்னர் இங்ஹெலர் பயன்படுத்த வேண்டியிருந்தது.

டேனீல் மெத்வதேவ்

நியூயார்க் வெப்பநிலை

நியூயார்க் நகரில் கடந்த வாரத்தில் வெப்ப நிலையானது 32.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. அதேபோல காற்றின் ஈரப்பதமும் 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதனால் போட்டிகளில் பங்கேற்ற ஒவ்வொரு வீரரும், நெருப்புக் களத்தில் விளையாடுவதைப் போலவே உணர்ந்தனர். தன்னைப் போலவே எதிர் தரப்பில் விளையாடிய வீரரும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டதாக டேனீல் தெரிவித்தார்.

பந்தே தெரியவில்லை

வெயில் கண்ணை மறைத்த நிலையில், முதலாம் சுற்றின் முடிவில் தன்னால் பந்தை சரியாக கணிக்கவே முடியவில்லை என்று டேனீல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “எதிர் தரப்பு வீரர் இனியும் ஓட முடியாது என்று நினைத்தேன். அவர் சோர்வடைந்து விடுவார் என நினைத்தேன். ஆனால், அவர் இயங்கிக் கொண்டே இருந்தார். உண்மையில் நாங்கள் இருவருமே சோர்வாகத்தான் இருந்தோம். வெற்றி பெறுவது மிக கடினமாக இருந்தது.

Also Read – 26,300 கோடி ரூபாய் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய பெண் தொழிலதிபர்

அடுத்த ஆண்டு இன்னும் மோசம்

2024ஆம் ஆண்டு கோடை காலத்தில், இதுவரை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும், அடுத்த 5 ஆண்டுகளில் வெயில் உச்ச நிலையிலேயே தான் இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: