விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி குணசுந்தரி(வயது 55). இன்று பகலில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு குணசுந்தரி வீட்டுக்கு திரும்பிச்சென்ற நிலையில் மதியம் 1 மணி அளவில், அவரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள், நரிக்குடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குணசுந்தரிக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு குணசுந்தரியை அழைத்து செல்லுமாறு அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்த உறவினர்கள், ஆம்புலன்ஸ் வருகைக்காக சுமார் 1 மணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் குணசுந்தரிக்கு உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் மதியம் 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். குணசுந்தரியின் இழப்பு குறித்து அவரின் உறவினர்கள் பேசுகையில், “சமீபக்காலமாக நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்க கூட மருத்துவர்கள் இல்லை. நரிக்குடியை சுற்றி கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.