உள்ளூர் சந்தையில் வாங்கிய மீனை சமைத்து உண்ட பிறகு அந்தப் பெண்ணின் கால் பாதங்கள் கருப்பாகத் தொடங்கின. படிப்படியாக பல்வேறு உபாதைகளுக்கு உட்பட்ட அந்தப் பெண் தனது சிறுநீரகத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கலிபோர்னியாவில் பெண் ஒருவர் மீன் சமைத்து சாப்பிட்டதால் அவரது உடலின் முக்கியமான நான்கு உறுப்புகளையும் இழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசமான பாதிப்புகளுக்கு காரணம் அந்தப் பெண் ஒரு பாக்டீரியா தொற்றுக்கு ஆளானதன் விளைவு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தப் பெண்ணின் தோழியின் கூறுகையில், நச்சுத் தன்மை கொண்ட திலாப்பியா மீன்களை உட்கொள்வதால் இது போன்ற பாதிப்புகள் எற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. 40 வயதான லாரா பராஜாஸ் என்ற பெண், எடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் கடந்த வியாழன் அன்று உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.
“இது எங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது… அவர் மிக மோசமாகபாதிக்கபட்டுள்ளார். அவரின் நிலை மிகவும் வேதனையளிப்பதாக இருக்கிறது என்கிறார் பராஜாஸின் தோழி அன்னா மெசினா. சான் ஜோஸில் உள்ள உள்ளூர் சந்தையில் திலாப்பியா மீன்களை வாங்கி சாப்பிட்ட பிறகு பராஜாஸ் நோய்வாய்ப்பட்டதாக மெசினா கூறினார், நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அவள் கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டாள். சுவாசக் கருவியின் உதவியுடன் தான் உயிர் வாழந்து வருகிறாள் என்று வேதனையுடன் கூறுகிறார் மெசினா.
படிப்படியாக பராஜசின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கோமா நிலைக்கு போய்விட்ட அவரின் விரல்கள் கருப்பாகி, தொடர்ந்து அவரின் பாதங்கள் கருப்பாக மாறியுள்ளன. அதன்பிறகு அந்தப் பெண்ணின் கீழ் உதடு கருப்பாக மாறியுள்ளது. கூடுதல் பாதிப்பாக பராஜசின் சிறுநீரகங்கள் செயலிழந்தன என்கிறார்கள் மருத்துவர்கள். விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற நோய் பராஜஸ்-ஐ தாக்கியதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நோய் பொதுவாக கடல் உணவு மற்றும் கடல் நீரில் காணப்படும் ஒரு கொடிய பாக்டீரியாவால் ஏற்படுகிறது. எனவே கடல் உணவை வாங்கி சமைக்கும் போதும், கடல் உணவுகளை சாப்பிடும் போதும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதையும் படிங்க: ஏர்டெல்லை ஓரம் கட்டும் ஜியோ ஏர் ஃபைபர்.. இதெல்லாம்தான் ஸ்பெஷல்!
அதே போல் நச்சுத் தன்மை கொண்ட மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதும் நல்லது என்கிறார்கள் நச்சு மற்றும் தொற்று நோய் தடுப்பு மருத்துவ நிபுணர்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.