தென்காசியின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்தனர். இது தொடர்பான கூடுதல் தகவல் இந்த வீடியோவில்.