அடிக்கும் வெயிலுக்கு எல்லா மக்களும் தங்களுக்கு அருகில் உள்ள ஆறுகளையும் குளங்களையும் அருவிகளும் சல்லடை போட்டு தேடிக்கொண்டு இருக்கிறார்கள். கூகுள் முழுக்க இதே தேடல்களாக தான் இருக்கிறது. அப்படி ஒவ்வொரு ஊருக்கும் பக்கத்தில் இருக்கும் சின்ன சின்ன ஸ்பாட்டுகளை கூட தேடி கண்டுபிடித்து உங்களுக்காக சொல்லி வருகிறோம். அப்படி இன்று கொண்டுவந்துள்ள ஸ்பாட் திருச்சிக்கார மக்களுக்கு தான்.

திருச்சியில் இருக்கும் மலைக்கோட்டையிலும், உச்சிப்பிள்ளையார் கோவிலில் அடிக்கும் வெயில் எல்லாம் மலையில் வழிந்து ஊருக்குள் புகுந்து விட்டதா என்று கேட்கும் அளவுக்கு வெப்பம் தாங்க முடியவில்லை. இப்படி போய்க்கொண்டு இருக்கும் போது அங்கிருந்து 1 மணி நேரத்தில் செல்லக்கூடிய அருவி என்றால் அது சொர்க்கவாசல் தானே?

ஆமாம் மக்களே திருச்சி நகரத்தில் இருந்து 1 மணி நேரத்தில் பசுமை நிறைந்த , ஆர்பரித்து கொட்டுகிற வெள்ளம், கூழாங்கல் பாதை என ரம்மியமாக இருக்கிற  புளியஞ்சோலை பகுதியை அடைந்துவிடலாம். இது தான் நாங்க சொல்ல வந்த குளுகுளு ஸ்பாட். மேலும் விபரங்களுக்கு கீழே படிச்சுட்டே வாங்க…

77 கிமீ தொலைவில் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி புளியஞ்சோலை பசுமையான காடுகளால் சூழப்பட்ட இயற்கை நீரூற்றுகள், ஆறுகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அமைதியின் உச்ச உணர்வைத் தரும் அழகிய இடமாக நம்மை வரவேற்கிறது. காடுகளில் இயற்கை நீரூற்றுகளை விரும்புவோருக்கு, புளியஞ்சோலை சரியான தேர்வு.

புளியமரங்கள் நிறைந்த அமைதியான பகுதி என்பதால் தான் இந்த இடத்திற்கு புளியஞ்சோலை என்று பெயர். இந்த சோலைக்கு நடுவில் ஆர்ப்பரிக்கும் நீரோடு அழகிய ஆகாய கங்கை என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. அது மட்டும் அல்லாமல் அருகே தடுப்பு அணைகளால் உருவாக்கப்பட்ட தற்காலிக ஏரி ஒன்றும் உள்ளது.

இந்த ஏரி அதிக ஆழம் இல்லை என்பதால் இங்கு  குழந்தைகளும் வயதானவர்களும் கூட பயம் இன்றி குளிக்கலாம். இவை மட்டும் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு நேரத்தில் நீந்தக்கூடிய பல நீரோடைகள் உள்ளன. இந்த நீரோடைகளில் உள்ள நீர் மிகையான மூலிகை செடிகள் வழியாக பாய்வதால் பெரும் மருத்துவ குணம் உள்ளதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

ஆகாய கங்கை அதிக உயரங்களில் இருந்து வீழாது. பாறை நிலப்பரப்பு வழியாக சின்ன அருவியோடு  ஓடும் நீரோடை போல் தோன்றும். கொல்லிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அடர்ந்த வனப்பகுதியாகும், இது மலையேற்றம் மற்றும் பிற சாகச நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமானது

இந்த மலையின் அடர்ந்த தாவரங்களுக்கு மத்தியில் 12 கிமீ உட்புறத்தில் ஒரு  சிவன் கோயில் அமைந்துள்ள து.அந்த கோவிலுக்கு வழிபடச் செல்லும் பக்தர்களும் இந்த அடிவாரத்தை கடந்து தான்  செல்கின்றனர். அதனால் அவர்கள் வலி பிடித்து காட்டிற்குள் ட்ரெக்கிங் போகலாம்.

அதுமட்டும் இல்லாமல் இந்த இடத்தை மலையேற்ற தளமாக மாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புளியஞ்சோலையில் கிட்டத்தட்ட 24 ட்ரெக்கிங் ரூட்டுகள் உள்ளனவாம். எனவே சாகச விரும்பிகள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களுக்கு திருச்சிக்கு அருகாமையில் உள்ள இந்த சுற்றுலாத்தலம் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் பாருங்க : பீச் முதல் உணவு வரை… கோடை விடுமுறையில் கேரளா சென்றால் இத்தனை விஷயங்கள் இருக்கு..!

சரி இந்த அருவிக்கு எப்போது சென்றால் சரியாக இருக்கும் என்று கேட்கலாம். கொல்லி மலையின் இயற்கை நீரூற்றுகளில்  ஆண்டு முழுவதும் குறைந்தபட்ச நீர் அளவு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் மழை காலம் அல்லது கோடை மழை பெய்தவுடன் இந்த இடத்திற்கு செல்வது நன்று.  ஆனால் மழைக்காலங்களில் செப்டம்பர் – டிசம்பர் நீர்வரத்து அதிகம் இருப்பதால் அந்த நேரத்தில் மெயின் அருவிக்கு அருகாமையில் செல்லவேண்டாம்.

புளியஞ்சோலைக்கு நுழைவுக்கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. நீர்வீழ்ச்சி எல்லா நாட்களிலும் எல்லா நேரத்திலும் திறந்திருக்கும், இருப்பினும் இருட்டுவதற்கு முன் இந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டால் நன்று.

திருச்சியிலிருந்து 40 நிமிடத்தில் துறையூரை அடையலாம். துறையூரில் இருந்து 25 கிமீ தொலைவில் புளியஞ்சோலையை  வெறும் 20 நிமிடங்களில் சென்று சேரலாம். பொது போக்குவரத்து வசதிகள் நிறைய உள்ளது. இல்லை நான் கார் அல்லது பைக்கில் செல்கிறேன் என்றால் திருச்சியில் இருந்து காவேரி பாலத்தைக் கடந்து மண்ணச்சநல்லூர், புலிவலம், ஆத்தூர் ரோடு வழியாக புளியஞ்சோலையை அடைந்திடலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: