உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் எனப்படும் விவிஐபி-களுக்கான டிக்கெட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதனை பிரபலப்படுத்தும் வகையில், முக்கிய பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட்டுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது. இதனைப் பெறுபவர்கள், அனைத்துப் போட்டிகளையும் விஐபி இருக்கையில் அமர்ந்து இலவசமாக பார்க்க முடியும்.
இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு ஏற்கனவே கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இதற்கான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம், மொழி மற்றும் கலாச்சாரத்தை தாண்டி, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத இடத்தைப் பிடித்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தங்களது சிறப்பு விருந்தினராக பார்வையிட்டு, கிரிக்கெட் தொடரை ரஜினி காந்த் பிரபலப்படுத்துவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.