சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி வினோத் என்ற சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய 2 ரவுடிகள் போலீஸ்என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றக் கோரி சோட்டா வினோத்தின் தாயார்ராணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “என்கவுன்டர் செய்யப்பட்ட அன்று வினோத் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகிய இருவரும் சிறுசேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். அங்கு வந்த போலீஸார் அவர்களை அழைத்துச் சென்று போலியாக என்கவுன்ட்டர் செய்துள்ளனர். எனவே இது தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவரின் விசாரணைக்கும், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.