புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் முதல் நாளில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்த ‘நாரி சக்தி வந்தன் விதேயக்’ என்ற பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு இது அமலுக்கு வந்துள்ளது. இந்த முக்கிய மசோதா அனைத்துக் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இந்த நிலையில் இந்த மசோதாவின் கோரிக்கை சோனியா காந்தியின் தலைமையில் யுபிஏவால் தொடங்கப்பட்டது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இந்த மசோதா முன்வைக்கிறது. பெண்கள் இடஒதுக்கீடு காலம் 15 ஆண்டுகளாக இருக்கும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவாகும். பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு அந்த குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

இந்தச் சட்டம் முதன்முதலில் மக்களவையில் 81வது திருத்த மசோதாவாக செப்டம்பர் 12, 1996 அன்று தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படாமல், மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது.

 மகளிர் இடஒதுக்கீடு மசோதா “எங்களுடையது” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நுழையும் போது, மசோதா பற்றி கேட்கப்பட்டதற்கு, “இது எங்களுடையது” என்று சோனியா காந்தி கூறினார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு நாள் முன்பு ‘எக்ஸ்’ இல் ஒரு பதிவில், “மத்திய அமைச்சரவையின் அறிக்கையின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் மசோதாவின் விவரங்களுக்கு காத்திருக்கிறோம்” என்று கூறினார். “சிறப்பு அமர்வுக்கு முன்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இது பற்றி நன்றாக விவாதிக்கப்பட்டிருக்கலாம், மேலும் இரகசிய முக்காட்டின் கீழ் செயல்படுவதற்குப் பதிலாக ஒருமித்த கருத்தை உருவாக்கியிருக்கலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா… கடந்து வந்த பாதை – 27 ஆண்டுகளுக்கு பின் பாஜக கையில் எடுக்கும் அஸ்திரம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு செவ்வாய்கிழமை அறிமுகப்படுத்தினால், அது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உள்ள அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியிருந்தார்.

இருப்பினும், பாஜக அத்தகைய கூற்றுக்களை நிராகரித்து, “இன்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் புகழை திருடவும், பொய்யான கதையைப் பரப்பவும் முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சி, இது முதலில் பாஜகவால் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் சொந்த கூட்டணி உறுப்பினர்களே ஒரு காலத்தில் மசோதாவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுமாறு மிரட்டினார்கள் என்பதை மறந்துவிட்டது.” என்று காட்டமாக பதில் அளித்துள்ளது.

மேலும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: