மனதில் பட்டதை வெளிப் படையாகச் சொல்லிக் கொண்டு அதிகம் படிப்பில்லாத ஆனால் அடிப்படை நியாயம் புரிந்த தந்தை பாட்டியின் சொல்லுக்குக் கட்டுப் படுகிற அவர்கள் பாசத்துக்கு உருகுகிற இரண்டாவது பிள்ளை கதை நாயகன் முத்து… …பாசத்தில் இந்தப் பேரனையும் அவன் மனைவியையும் கட்டிப் போட்டிருக்கும் பாட்டி.. இவர்களுடன் கேட்டரிங் முடித்து பணியில் அமர்ந்திருக்கும் கடைக்குட்டி ரவி.

ஏற்கனவே ஒரு வயதானவருக்கு வாழ்க்கைப் பட்டு ஒரு சிறுவனுக்குத் தாயாக அவர் இறந்தபின் எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்று தவிக்கிற ரோகிணி. .அதற்காக அடுக்கடுக்காய்ப் பொய் சொல்லி மனோஜைக் கரம் பிடித்து இந்தக் குடும்பத்தில் நுழைந் திருக்கிறாள்… இவர்களைச் சுற்றிச் சிறகடித்துச் செல்கிறது இந்தத் தொடர்.
அருமையான கதைக் கட்டமைப்பு… பொருத்தமான நடிக நடிகையர்கள்… எல்லோரின் பங்களிப்பும் பிரமாதம். இப்படியே தொடர வேண்டும் என்பதே என் அவா.
–மீனாக்ஷி மோஹன்
ஹைதராபாத்