இந்தியாவைத் தொடர்ந்து, சந்திரனை ஆய்வுசெய்வதற்காக ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியுள்ளது. இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அதாவது 5 மாதங்களில் நிலவில் தரையிறங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தில் முதலாவதாக இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கி வெற்றிகரமாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. லேண்டர், ரோவர் ஆகியவை அணைத்துவைக்கப்பட்ட நிலையில், நிலவில் மீண்டும் வரும் 22-ஆம் தேதி சூரியன் உதிக்கும்போது, அதனை மீண்டும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முடியுமா என விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த சூழலில், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம், ஸ்லிம் என்ற விண்கலத்தை அங்குள்ள தனேகசிமா (Tanegashima) விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ என்ற ராக்கெட் மூலம் வியாழக்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்னதாக மோசமான வானிலையால் விண்கலத்தை ஏவும் திட்டம், மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஏவப்பட்டுள்ளது.

“நிலவை ஆராய்வதற்காக ஸ்மார்ட் லேண்டர்” என்பதன் சுருக்கமே ஸ்லிம் ஆகும். இது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, சந்திரனில் தரையிறங்கிய 5-ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டு 40 நாட்களில், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்கிய நிலையில், நிலவில் ஸ்லிம் தரையிறங்க 4 முதல் 6 மாதங்கள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி மாதத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய நிலையில், ஸ்லிம் விண்கலம், நிலவின் சியோலி என்ற பகுதியில் தரையிறங்க உள்ளது. சந்திரயான் விண்கலம் மென்மையான முறையில் தரையிறங்கியது. அதேநேரம், ஸ்லிம் விண்கலம், உரிய இடத்தில் நேராக தரையிறங்கும் முயற்சியில் ஈடுபடும். தேர்வுசெய்யப்பட்ட பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இறங்கும் என்று ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், இரண்டு அடுக்கு தரையிறங்கும் முறை பின்பற்றப்பட உள்ளது.

100 மீட்டர் தொலைவுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள வெப்பநிலை, தனிமங்கள் உள்ளிட்டவை குறித்து சந்திரயான்-3 ஆய்வுசெய்து தகவல்களை அனுப்பியது. இந்நிலையில், ஆலிவின் பாறைகளின் தன்மை குறித்து ஸ்லிம் ஆராய உள்ளது.

Also Read : ஏரியின் மேற்பரப்பில் தோன்றிய 50 அடி நீள ராட்சத நீர்வாழ் உயிரினம்..? குழப்பத்தில் பூங்கா ஊழியர்கள்

சந்திரயான்-3 விண்கலம், 615 கோடி ரூபாயில் ஏவப்பட்ட நிலையில், ஸ்லிம் விண்கலத்தை ஏவுவதற்கு 830 கோடி ரூபாய் செலவுபிடித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலம், 3 ஆயிரத்து 900 கிலோ எடையுடன் இருந்த நிலையில், ஸ்லிம் விண்கலமோ 700 கிலோ மட்டுமே உள்ளது. மேலும், 2.4 மீட்டர் உயரம், 1.7 மீட்டர் நீளத்துடன் நிலவில் தரையிறங்கும் சிறிய மற்றும் இலகுவான விண்கலம் என்ற பெருமையை ஸ்லிம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: