டூப் ஆர்ஸ்டிஸ்ட்களைப் பயன்படுத்தாமல் தாமே களத்தில் இறங்கி துணிச்சலாக ஸ்டன்ட் காட்சிகளில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், தனது படங்களில் பிரமிக்க வைக்கும் பல ஸ்டன்ட்களைத் தொடர்ந்து துணிச்சலுடன் செய்து வருகிறார்.
“Mission: Impossible – Ghost Protocol’ படத்தில் உலகின் உயரமான பில்டிங்கான ‘புர்ஜ் கலிஃபா’வில் சுமார் 1,700 அடி உயரத்திலிருந்து குதித்தது, ‘Mission: Impossible – Rogue Nation’ படத்தில் பறக்கும் விமானத்தின் வெளியே தொங்கிக் கொண்டு சரியான டேக் கிடைக்கும் வரை எட்டு முறை மொத்தம் சுமார் 48 மணி நேரம் பறந்தது எனப் பல ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் இந்தக் காட்சி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்ட படப்பிடிப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாராசூட்டுடன் உண்மையிலேயே டாம் குரூஸ், பைக்கில் வேகமாகச் சென்று மலை உச்சியிலிருந்து குதிக்கும் காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
+ There are no comments
Add yours